அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

11/21/17

என் வீட்டு தோட்டத்தில் :) Butterfly and Bumble beeவண்ணத்துப்பூச்சிக்கு கொஞ்சம் உணவு :)


                                                                               


எனக்கு சின்ன வயசில இருந்தே ஒரு பழக்கம் அது முதியோர் ,ஆதரவற்றோர் போன்ற மனிதர்களாக இருக்கட்டும்  சின்ன பறவையா இருக்கட்டும்  ரோட்டில் இருக்கும் நாய் பூனையா இருக்கட்டும் எதுவாக இருந்தாலும் பார்த்தா ஏதாவது உணவு கொடுப்பேன் .அப்படி கொடுத்து அவங்க சாப்பிடும்போது  நிறைவா   ஒரு சந்தோஷம் கிடைக்கும்.

11/10/17

தொல்லை பேசிய அழைப்பு :) cold-call scams

                                                                                   


                                   கொஞ்சம் சொச்சம் காலத்துக்கு முன்னாடி :) ஒரு பதிவை நம்ம மேதகு பூஸார் எழுதியிருந்தாங்க .யாருமே மறந்திருக்க மாட்டீங்க ஆனாலும் நேர்மை நீதி நியாயம் என்று ஒன்று இருக்கில்லையா அதற்காக அப்பதிவின் சுட்டியை இங்கே இணைக்கிறேன் :) 

இங்கே எங்க வீட்ல லாண்ட்லைனில் பெயர் தெரியா /unknown அழைப்புக்களை நாங்கள் பிளாக் செய்து வைத்திருக்கிறோம் .அதனால் யாரும் எங்க லாண்ட்லைனுக்கு பிரைவேட் எண்ணிலிருந்து  அழைத்தாலும் எங்களுக்கு அழைப்பு வராது .

11/3/17

நானும் லூயிஸும் பிங்கி பிராமிஸும் :)..pinky promise


                                                                                 
போன ஞாயிற்றுக்கிழமை எங்க ஆலயத்தில் ஒரு குட்டி சம்பவம் எனக்கு மன வருத்தம் தரும் விஷயம் நடந்து போச்சு .ஏற்கனவே ஒரு பதிவில் எங்க ஆயத்துக்கு வரும் குட்டிப்பையன் லூயிஸ் பற்றி சொல்லியிருக்கேன் .எனக்கு joy என்று பெயர் சூட்டிய வாண்டு தான் லூயிஸ் .கொஞ்சமே கொஞ்சம் அளவுக்கதிகமா  குறும்புக்கார பிள்ளை .வானம்பாடி மாதிரி இங்குமங்கு பறந்தவண்ணம் இருக்கும் குட்டீசை எப்பவும் கட்டுப்படுத்தி ஓரிடத்தில் அமர வைப்பது மிக கடினம்   .ஆலயத்தில்மிகவும் அமைதியான நேரத்தில் தொம் த்தோம்னு ஷூ கால் சப்திக்க நடப்பான் ஆமென் எல்லாரும் சொல்லி முடிச்ச பிறகு உரக்க ஆமென் என்பான் .எங்க சர்ச்சுக்கு வரும் முதிய பெண்மணிகளுக்கும்  அவனுக்கும் எப்பவும் அக்கினிநட்சத்திரம் தான் :) .அவனை காணும்போதெல்லாம் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் முகமா இருப்பாங்க :) 

10/26/17

கற்றுக்கொண்டேன் நானும் ஒரு பாடம். இது ஒரு அனுபவப்பகிர்வு .

எங்கள் ஆலயத்தில் நடந்த ஒரு சம்பவம் மற்றும் உரையாடல்களின் தொகுப்பு .


                                                                                   
                                                                                    


எங்கள் ஆலயத்தில் பலர் வாலன்டியர் சேவை செய்வோர் நான் உட்பட .நம்ம ஊரில் ஆலயத்தை  துப்புரவு செய்ய மற்றும் பல பணிகளுக்கு வேலைக்கு ஆள் அமர்த்துவது வழக்கம் .இங்கே வெளிநாடுகளில் பெரும்பாலும் அவ்வாறான வழக்கம் இல்லை ஆலயத்தின் உறுப்பினர்களே தாமாக முன்வந்து எல்லா உதவிகளையும் செய்வாங்க .எங்கள் ஆயர் பேப்பர் மற்றும் பறந்து விழும் குப்பைகளை பொறுக்கி அள்ளுவார் .இதில் வயதும்  ஒரு தடையில்லை   எங்கள் ஆலய பொருளாளர் வயது 78 இருக்கும் அவரும் வருவார் ..புல்  வெட்டும் மெஷினால் தோட்டம் லானை சீரமைப்பார் .இப்படி நிறையபேர் இருக்காங்க . எனக்கு இந்த வாலண்டியரிங் என்பது சும்மா ஊதியமின்றி வேலை செய்வது மனம் விரும்பி பொழுது போக்காக செய்வது என்று  கணித்திருந்தேன்

10/24/17

சும்மா ஒரு ஜாலி chat :)

ஹாய் நான் பிரபு பேசறேன் :)                                                                                 

என்னை ஏற்கனவே அம்மா அதாவது சின்ன மாம் உங்களுக்கு இண்ட்ரொட்யூஸ் செய்து வச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன் .எதுக்கும் ஒரு சிறு அறிமுகம் என்னை பற்றி ..

என் பெயர் பிரபு அதாவது இது சின்ன மாம் வச்ச பெயர் ..நான் தினமும் சின்னம்மாவை வந்து விசிட் செஞ்சிட்டு போவேன் .அவங்க கையால் டெய்லி மம்மு சாப்பிட்டு தான் போவேன் ..எனக்கு பிரபுன்னு பெயர் வரக்காரணம் நான் மியாவ் னு கத்தும்போது கறகறக்கறன்னு ஆக்டர் பிரபு பேசுவார் இல்லியா அதே மாதிரி (என்ன கொடுமை சரவணன் ) ஆங் :) அதே மாதிரிதான் இருக்கும் அதனால் சின்னம்மா செல்லமா எனக்கு பிரபுன்னு பேர் வச்சிட்டாங்க :) அப்புறம் ரெண்டு வீட்டு சாப்பாடு இல்லியா அதனால் கொஞ்சம் கொழு மொழுன்னு இருப்பேன் இது போதும் என்னைப்பற்றிய அறிமுகம் ..
ரொம்ப நாளா சின்ன மாம் பதிவு ஒண்ணும் எழுதலை அதனால் அவங்களை ஒரு மாறுதலுக்கு பேட்டி எடுத்து போஸ்ட் போடவைக்கப்போறேன் :)

பிரபு ...சின்னம்மீ எதுக்கு ஹாலிடேஸ் முடிஞ்சும் புது பதிவு ஏதும் போடலை இங்கே ?

angel    ... இல்ல பிரபு மனசு அடிக்கடி off ஆகுது எதையாவது எழுதலாம்னு நினைக்கும்போது நாட்டில் நடக்கும் சம்பவங்கள் மனதை கஷ்டப்படுத்தி என்னை ஒண்ணுமே செய்ய முடியாம ஆகுது ..லண்டன் போனப்போ ரோட்டில் படுத்து இருந்த ஹோம்லெஸ் பீப்பிள் பார்த்தேன் ,பறவைகள் உக்காரக்கூட இடமில்லாத வெறும் கட்டிடங்கள் பார்த்தேன். ..நியூஸில் கேள்விப்படும் ஒவ்வொண்ணும் ஏதாவது என்னை எழும்ப விடாம செஞ்சுடுது பிரபு :(

பிரபு ..  சின்னமாம் லைப் என்றால் அப்படிதான். நாம தான் இதுவும் கடந்து போகும்னு போய்க்கிட்டே இருக்கணும் .எல்லாத்தையும் மனசில் போட்டுட்டு குழம்ப கூடாது . அப்செட் ஆகாதீங்க எல்லாத்துக்கும் .

அது சரி நீங்க குயில்லிங் எதுவும் செய்யலியா ?

angel .. ஓ  செய்தேனே தீபாவளி கார்ட் மைன்க்ராப்ட் கார்ட் அப்புறம் பிரபு உனக்கொரு விஷயம் தெரியுமா நான் ஒரு காம்பெடிஷன்ல கலந்துக்கிட்டேன் ..அது சர்ச் of இங்கிலாந்து ஆங்கிலிகன் ஆலயங்கள் அனைத்துக்குமான ஒரு போட்டி ..நமது ஆலயம் சமூகத்துக்கு என்ன உதவி செய்றாங்க என்பதை A 3 பேப்பர் அளவு சார்ட் பேப்பரில் வரைந்தோ அல்லது குயில்லிங் வடிவிலோ அனுப்பனும் ..நான் அனுப்பினேன் ஆனா எனக்கு பரிசு கிடைக்கவில்லை ..270 என்ட்ரிஸ் வந்ததாம் போட்டிக்கு அதில் சிலவற்றை தேர்ந்தெடுத்து கிரேட் கம்யூனிட்டி mural   இல் கொலாஜாக செய்திருக்காங்க அது 10 மீட்டர் நீளம் 3 மீட்டர் உயரம் .
அதை பார்வைக்கு லண்டன் செயின்ட் பவுல் கதீட்ரலில் வெச்சிருந்தாங்க .அங்கே தான் முந்தி இளவரசர் சார்லசுக்கும் டயானாவுக்கும் திருமணம் நடந்தது .மகாராணியின் சில்வர் கோல்டன் ஜூப்ளி வைபவங்கள் எல்லாம் அங்குதான் நடந்தது .லார்ட் நெல்சன் மார்க்ரெட் தாட்சர் வின்ஸ்டன் சர்ச்சில் இங்கே தான் துயில்கிறார்கள் .அந்த ஆலயத்தில் என் படமும் கொலாஜில் இடம்பெற்றது .. தற்சமயம் இங்கிலாந்தில் உள்ள பெரிய கதீட்ரல்களுக்கு இது tour செல்கிறது நவம்பர் இறுதியில் லண்டனில் ஒரு பெரிய இடத்தில வைக்கப்படுமாம் .


இது நான்  செய்து அனுப்பியது. 


                                                                                

குவில்லிங் நான்  செஞ்சேன் வரைந்தது எல்லாம் உன் அக்கா :)


                                                                                   


                                                                                  

10,000 பவுண்ட் பரிசுப்பணம் எங்க ஆலயத்துக்கு கிடைக்காததால் கொஞ்ச வருத்தம்தான் ஆனா யாருக்கு பரிசு கிடைத்ததோ அவங்க உண்மையில் அதற்க்கு தகுதியானவங்க .

பிரபு ..பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் சின்னமாம் :)

ஆமா நீங்க ஹாலிடேஸ் போறேன்னு சொன்னீங்களே போகல்லையா ?

angel ..இல்லைடா பிரபு பாஸ்போர்ட் ரினியூவலுக்கு அனுப்பியிருந்தேன் அது வர லேட் ஆகிடுச்சுஅது கிடைச்ச சமயம்   அக்காவுக்கு GCSE ரிஸல்ட்ஸ் டேட் ரெண்டு நாளில்னு நியூஸ் கிடைச்சது அதனால் வெளிநாட்டுக்கு போகலை இங்கே தான் உள்ளூருக்குள்ளேயே ட்ரிப்ஸ் போனோம் ..அப்புறம் கொஞ்சம் நாள் பிக் பாஸ் பார்த்தேன் :) ஹீ ஹீ ..

பிரபு ...சரி அப்போ நிறைய படம்லாம் எடுத்திருப்பீங்களே அதையெல்லாம் போடுங்க அப்புறம் இப்போல்லாம் நீங்க சமைக்கிறதே இல்லியா ? ஒரு சமையல் பதிவையும் காணோமே ?
அங்கே அதிரா ஆன்ட்டி கலக்கிட்டிருக்காங்க சீக்கிரம் நீங்களும் களத்தில் குதிங்க .

angel ..ஓகே பிரபு சீக்கிரம் நீ சொன்ன மாதிரி செய்றேன்.

பிரபு ..ஓகே சின்னமாம் இன்னொரு ரிக்வஸ்ட் அன்னிக்கு உங்க மெயிலை திறந்து பார்த்தேன் அதிரா ஆன்டி பொண்ணு படம் இருந்தது அவளை கொஞ்சம் ஜிம்முக்கு போக சொல்லுங்க ரொம்ப குண்டா இருக்கா ஆனா ஸ்ரீராம் அங்கிள் பொண்ணு படம் எங்கள் பிளாக்கில் பார்த்தேன் ஸ்லிம்மா அழகா இருக்கா :) டெய்சியையும் அவளை மாதிரி  ஆக சொல்லுங்க :)

angel  .சரி பிரபு உன்னோட பேசியதில் நான்  ஹாப்பி ஆகிட்டேன் இனிமே ஒழுங்கா போஸ்ட்ஸ் போடுவேன் ..பை பை :)                                                              ***********************